1895-ல், குறைந்த அழுத்தத்தில் உள்ள வாயுவின் ஊடாக மின்சாரத்தை செலுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ரான்ட்ஜென் ஆய்வு செய்தார். அதே ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, இருட்டறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்ட ரான்ட்ஜென், ‘பேரியம் பிளாட்டினோ சயனைடு’ எனும் வேதிப் பொருள் தடவப்பட்ட திரையை வைத்து ஆராய்ச்சி செய்தார். அப்போது இரண்டு மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பென்சிலின் நிழல் ஒளிர்வதைக் கண்டார். உடனே பல்வேறு தடிமன்களில் பொருட்களை வைத்து அந்தக் கதிர்களை ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு தடிமனும் ஒவ்வொரு நிழலை (பிம்பத்தை) உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். ‘எக்ஸ்-ரே’ கதிர்வீச்சை கண்டு பிடிக்கப்பட்ட தினமான நவம்பர் 8-ம் தேதி உலக கதிரியக்க வரைவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது

1895-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த வில்லெம் ராண்ட்ஜென் அவர்களால் கண்டுபிடிக்கபட்ட எக்ஸ் கதிரியக்க கருவியின் நூற்றாண்டு நிறைவை சிறப்பிக்க ஜெர்மன் அஞ்சல்துறை 1995-ஆம் ஆண்டு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது வரலாற்றில் நவம்பர் 8 ஆம் தேதி உலக கதிரியக்க வரைவியல் தினம் அனுசரிக்கப்படுவதை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.