புற்றுநோய் (cancer) என்பது கேடுதரும் உடற்கட்டிகளால் ஏற்படும் பல நோய்களின் பொதுவான ஒரு பெயர் ஆகும். இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும்.
நம் உடலில் செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றி மற்றும் பழைய செல்கள் இறக்காமல் இருந்தாலும் அவை ஒன்றுசேர்ந்து கழலையாக மாறிவிடுகிறது. இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த ஆண்டுதோறும் நவம்பர் 7ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறியீடாக ரோஸ்‌ ரிப்பன் இருக்கிறது பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் இது ஒன்றாக இருக்கிறது.
வரலாற்றில் நவம்பர் ஏழாம் தேதி முக்கிய தினங்களை பிடித்தேன் எடுத்து வைக்கக் கூடிய வகையில் இந்தியாவில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் ஏழாம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் நவம்பர் 7ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுவதை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.