ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக கடைப்பிடிக்கிறது. உலகம் முழுவதும் பாலியல் வன்முறை, அடக்குமுறை, அடிமைத்தனம், பெண்ணுரிமை மறுப்பு, சமத்துவமின்மை, பாகுபாடு போன்ற வன்முறைகளை ஒழித்து பெண்ணியம் காப்பதற்காக 1999-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
பெண்கள் மீதான தாக்குதல் வன்முறை பாலியல் பலாத்காரம் கௌரவக் கொலைகள் சமூகவலைத்தள தொந்தரவு போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன இத்தகைய பெண்கள் மீதான தாக்குதல்கள் தவிர்க்கக் கூடியவை நவநாகரிக உலகில் பல துறைகளில் பெண்களின் நிலையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பாக பெண்களின் பொருளாதார சுதந்திரம் வளர்ச்சி அடைந்துள்ளது இதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஆண்களுக்கு வரவேண்டும் சராசரி ஆண்களால் இதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை சிறு குழந்தைகளும் பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாகும் அதிகரித்துவிடுகிறது கடந்த ஆண்டுகளில் குழந்தைகள் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து உள்ளது என புள்ளிவிபரம் கூறுகிறது. வரலாற்றில் நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு நாள் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.