இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1947–ம் ஆண்டு ஜூலை 22–ந்தேதி இந்திய அரசியல் அமைப்பால் ஏற்று கொள்ளப்பட்ட தேசிய கொடி பொறித்த தபால் தலை ‘ஜெய்ஹிந்த்’ என்ற தலைப்பில் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி மூன்றரை அணா மதிப்பில் வெளியிடப்பட்டது. வரலாற்றில் நவம்பர் 21 சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட நாள் என்பதை அஞ்சல்தலை சேகரிப்பாளரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான விஜயகுமார் எடுத்துரைத்தார்.