கழிப்பறையில் மலம் கழிப்பது நல்லது ஆரோக்கியமானது பாதுகாப்பானது திறந்தவெளி கழிப்பிடம் தொற்றுநோய்களின் இருப்பிடம்

அஞ்சல் தலை கண்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அஞ்சல்தலை சேகரிப்பாளர்

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு அஞ்சல் தலை மூலம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்.

உலக கழிப்பறை தினம் குறித்து கூறுகையில்,
கழிப்பறை பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில்
19 நவம்பர் 2001ம் ஆண்டு உலக கழிப்பறை கழகம் என்ற சர்வதேச அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19ம் தேதி அனைத்து நாடுகளிலும் ‘உலக கழிப்பறை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.

திறந்த வெளியில் பயன்படுத்தும் கழிப்பறைமூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1 கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. யுனிசெப் சர்வே யின்படி இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்த போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன.

‘நிர்மல் பாரத் அபியான்’ என்னும் திட்டம் மத்திய அரசாங்கத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
2022 -க்குள் ஊரகப் பகுதிகளில் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழித்தலை அடியோடு ஒழிப்பதை உறுதி செய்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக மத்திய, மாநில அரசாங்கம், பொதுமக்கள் கழிப்பறைக் கட்ட தேவையான மானியம் வழங்கி வருகிறது.

சுகாதாரமான கழிவறையின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட கழிவறை அமைப்பதற்கான வாசகம் கொண்ட அஞ்சல் அட்டை, இன்லேண்ட் லெட்டர் மெகதூத் போஸ்ட் கார்ட் கொண்டு அஞ்சல் தலை கண்காட்சி மூலம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் அஞ்சல்தலை சேகரிப்பாளருமான விஜயகுமார்.