வினோபா பாவே (Vinoba Bhave, விநாயக் நரகரி பாவே, செப்டம்பர் 11, 1895 – நவம்பர் 15, 1982) ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் மண் கொடை இயக்கத்துக்காக மிகவும் அறியப்படுகிறார்.
மராட்டிய மாநிலம் மும்பைமாவட்டம் கொலபா எனும் கிராமத்தில் கொங்கணஸ்த் பிராமணர் குலத்தில் நரசிம்புராவ்பாவே-ருக்மணிதேவி தம்பதியருக்கு பிறந்த மகனாவார்.தாய்மொழி கொங்கணி/மராத்தி. இவரின் சகோதரர்கள் பல்கொபா பாவே ,சிவாஜிபாவே இருவரும் சமூகசேவகர்கள்.
வினோபா பாவே சிறந்த இந்துஆன்மீக போதகர்,இந்திய விடுதலை போராளி ஆவார்.
மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார்.
இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து நிலம் கொடையாக அளித்தலை 1951 ம் ஆண்டு வினோபா பாவேயால் தொடங்கப்பட்டது.

வினோபா பாவே இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக சேகரிக்கப்பட்டன.

13 ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து 2,95,054 ஏக்கர் நிலத்தைத் இயக்கத்திற்காக தானமாகப் பெற்றார்

பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போரில் கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்த பகவத் கீதைக்கு வினோபா பாவே உரை எழுதினார்.
1976 பசுக்களை கொல்வதை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார் காலப்போக்கில் எல்லாவிதமான செயல்பாடுகளில் நிறுத்திக்கொண்டார் வாழ்வின் இறுதி நாட்களில் உணவையும் மருந்துகளையும் கூட எடுத்துக் கொள்ளவில்லை அதன் பின் சில நாட்களிலேயே1982 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் உயிர் துறந்தார்.
வினோபா பாவேயின் மிகச்சிறந்த தேசிய சேவைகளை பாராட்டி அவரது மறைவுக்கு பின் 1983ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு ஆச்சார்ய வினோபா பாவேக்கு இந்திய அஞ்சல் துறையினர் 50 காசுகள் மதிப்பில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் நவம்பர் 15 ஆச்சார்ய வினோபா பாவே நினைவு நாள் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.