1948 ஜனவரி 30 நாதுராம் கோட்ஸேவால் மகாத்மா காந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். உடனே அங்கிருந்த காவலர்களால்

பிடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரனை நடைபெற்றது.

பின்னர், அன்றைய பஞ்சாப் மாநிலத்தின் சிம்லா நீதிமன்றத்தில் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

இப்படியொரு தண்டனை அளிப்பதை, அகிம்சையை போதித்த காந்தியே விரும்பமாட்டார் என கூறி தண்டனையை குறைக்க காந்தியின் மகன்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது.

15 நவம்பர்1949 ல் அம்பாலா சிறையில்

நாதுராம் கோட்ஸே

தூக்கிலிடப்பட்டார். வரலாற்றில் நவம்பர் 15 மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளாகும் என்பதை திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துக் கூறினார்.