உலக நோய்த் தடுப்பு ஆம் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக பல்வேறு நோய்களுக்கும் நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. வருமுன் காக்கும் விதமாக தேவையான தடுப்பு மருந்தை சரியான காலத்தில் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. தடுப்பு மருந்தால் தடுக்கப்படக் கூடிய நோய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பு மருந்து அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த இந்நாள் கடைபிடிக்கப் படுகிறது.

தடுப்பு மருந்தின் அவசியம்:

தாயிடம் இருந்து குழந்தைக்குக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு திறன் நீடித்து நிற்பதில்லை. எனவே குழந்தையை நோய் தாக்கும் அபாயம் உருவாகும். மேலும் நோய்த்தடுப்பாற்றலை உருவாக்கும் போது உயிருக்கு ஆபத்தான நோய்களிடம் இருந்து அதிகப் பாதுகாப்பு கிடைக்கும். தடுப்பு மருந்து அளிக்கத் தொடங்கியதில் இருந்து உடலில் காப்பு உருவாவது வரையுள்ள செயல்முறைகள் நோய்த்தடுப்பு எனப்படும்.
ஓர் உயிரியல் தயாரிப்பான தடுப்பு மருந்து ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை வலுப்படுத்துகிறது. நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் போன்றதொரு பொருள் தடுப்பு மருந்தில் உள்ளது. பெரும்பாலும் இப்பொருள் பலவீனமடைந்த அல்லது இறந்த நுண்ணுயிரில் இருந்தும் அல்லது அதற்கெதிரான நச்சில் இருந்தும், அல்லது அதனுடைய ஒரு மேற்பரப்புப் புரதத்தில் இருந்தும் உருவாக்கப்படும்.

நம் உடலின் நோய் தடுப்பாற்றல் மண்டலம் என்பது நம்மை பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் தற்காப்பு அமைப்பு ஆகும். நம் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளையும், தீங்கு செய்யும் உயிரணுக்களையும் அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நம்மை இது பாதுகாக்கிறது. ஆனால் நோய் தடுப்பாற்றல் அமைப்பில் குறைபாடுகள் ஏற்படும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து அதிகமான தொற்றுநோய்களுக்கு நாம் ஆளாக நேரிடும். நம் உடலின் சொந்த உயிரணுக்களை (செல்களை) இனம்காண முடியாமல் சில நேரங்களில் நோய் தடுப்பாற்றல் மண்டலம் தன் உடலை தானே சேதப்படுத்தவும் கூடும்.

தடுப்பு மருந்து அளிப்பதன் மூலம் ஒருவருக்கு தொற்று நோய்த் தடுப்பை அல்லது எதிர்ப்பை உருவாக்குவதே நோய்த்தடுப்பு எனப்படும். உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஒரு குழந்தையை நோய்த்தடுப்பு பாதுகாக்கிறது. பிறருக்கு நோய் பரவுவதையும் குறைக்கிறது. உடலின் நோய் தடுப்பாற்றலைத் தடுப்பு மருந்து ஊக்குவித்து ஒருவரை நோயில் இருந்தும் தொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது. குழந்தைக்குத் தாய்ப்பால் வழியாக சிறிது தடுப்பாற்றல் கிடைக்கிறது. குழந்தையின் தடுப்பாற்றல் மண்டலம் உருவாகி வரும்போது இந்தத் தடுப்பாற்றல் படிப்படியாகக் குறைகிறது. நோய்த்தடுப்பே ஒரு சுகாதார முதலீடாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்கு குணமாக்கும் ஆற்றல் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்த புரிந்துகொள்ளுதல் மக்களிடம் இன்னும் தெளிவாக இல்லை என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் ஆற்றல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், இம்மருந்துகள் பயன்படுத்தப்படும் விதத்தை மாற்றவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் உலக தடுப்பாற்றல் விழிப்புணர்வு வாரத்தில் முயற்சித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களைக் குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், மற்ற நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

மனித உயிர்களைப் பாதுகாக்கும் தடுப்பு மருந்துகளின் விலை உலகில் அதிகரித்துள்ளதால் சில நாடுகளில் சிறார்க்கு தடுப்பு மருந்துகளை முழுமையாக வழங்க முடியாநிலை ஏற்பட்டுள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

சுலபமாக கிடைக்கக்கூடிய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளாக
சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி, சிவப்பு திராட்சை மற்றும் ப்ளூபெர்ரி பழங்களில் காணப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற பாலிஃபீனால் கூட்டுப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

இந்தியாவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பல உள்ளன. அப்படி எளிதில் கிடைக்கக்கூடிய அதுவும் விலை அதிகமில்லாதது வைட்டமின் சி உணவுவகைகளான பழங்கள், பூண்டு, ஆளி ,விதை , மஞ்சள்,தயிர், பாதாம், நண்டு, கடல் சிப்பி மற்றும் சிவப்பு இறைச்சி, பச்சை இலை காய்கறிகள், கிரீன் டீ, கேரட், சிவப்பு பூசணி மற்றும் பப்பாளி உள்ளிட்டவற்றையும் உண்ணலாம் என வரலாற்றில் நவம்பர் 10 உலக நோய் தடுப்பு தினத்தை குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.