வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு ரயிலில் செல்ல வேண்டுமென்றால் சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் படிவம் பூர்த்தி செய்யவேண்டும் என்று ஒரு தகவல் பரவியதை தொடர்ந்து. சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு படையெடுக்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். 50க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சென்னை மாநகராட்சி நுழைவாயில் அருகே வந்தபொழுது காவல்துறை தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் நீங்க இருக்கும் இடத்திற்கே திரும்பி செல்லுங்கள் என்று கூறினார் வடமாநில தொழிலாளர்கள் காவல்துறையிடம் நாங்கள் கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவித்து வருவதாகவும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.இருப்பினும் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.