சென்னை பெரம்பூர் வியாபாரிகள் சங்கத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் தா.வெள்ளையன் தலைமையில் வடசென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றி மறைந்த A.அப்துல் குத்தூஸ் அவர்களின் திருவுருவப் படத்தை வியாபாரிகள் அனைவரின் முன்னிலையில் பேரவை தலைவர் தா.வெள்ளையன் திறந்துவைத்தார்

A.அப்துல் குத்தூஸ் சென்னை பாடி மண்ணூர்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளாக இரும்பு வியாபாரம் செய்து வந்தவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு வணிகர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர் கடந்த 17 ஆம் தேதி உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் இவரின் நினைவு கூறும் வகையில் பெரம்பூர் வணிகர் சங்கத்தில் மறைந்த A.அப்துல் குத்தூஸ் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் சி.எல்.செல்வம், வட சென்னை மாவட்ட தலைவர் வியாசை M.மணி மாநில இணைச் செயலாளர் மறையூர் A.கருப்பையா, மாவட்ட பொருளாளர் S.தங்ககுமார், மாநில துணை பொதுச்செயலாளர் P.V.கருணாகரன், வட சென்னை மாவட்ட துணை தலைவர் A. ஆல்பர்ட், வட சென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் K.ராமகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் A.வினோபாஜி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.