வடசென்னை பகுதியில் அதிமுக மாவட்ட செயலாளராகவும் சிறந்த சமூக ஆர்வலராகவும் வலம் வந்த ஆர்.எஸ்.ராஜேஷூக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னால் உடல்நிலை மிகவும் சோர்வு ஏற்பட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது முறையான மருத்துவ பரிசோதனை செய்தபின் மருத்துவர்கள் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக அரசு முழு உடங்கு உத்தரவு பிறப்பித்த அன்றிலிருந்து இன்று வரை ஆர்கே நகர் தொகுதி மக்களுக்காக இரவு பகல் பார்க்காமல் ஓயாமல் களப்பணியில் ஈடுபட்டு வந்தவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கொரோனா ஓவியம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நலத்திட்ட உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக உணவுகள் என ஓயாமல் ஓடி உழைத்தவர். ஆர்.எஸ்.ராஜேஷ், இவர் சீக்கிரமாக மீண்டு மீண்டும் மக்கள் பணியில் இறங்கி சேவை செய்ய வேண்டும் என்று ஆர்கே நகர் தொகுதி மக்கள் தெரிவித்தனர்.