சென்னை முழுவதும் காவல் துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி பொதுமக்களின் உதவியுடன் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது ஆனால் கடந்த சில மாதங்களாக ஒரு சில பகுதிகளில் கேமராக்கள் பழுதடைந்து பயன்பாட்டுக் இல்லாமல் உள்ளது இதனால் பொதுமக்கள் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு அறிவுறுத்திய காவல்துறை தான் அதை கண்காணித்து மக்களின் பயன்பாட்டில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு சந்திப்பில் கண்காணிப்பு கேமரா பொதுமக்களின் உதவியுடன் பொருத்தப்பட்டிருந்தது ஒரே இடத்தில் பொருத்தப்பட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்கள் மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல் தலை குனிந்த நிலையில் பூமியை நோக்கி உள்ளது பொதுமக்கள் அளவுக்கு மீறி சந்திக்கும் முக்கிய இடம் பழைய வண்ணாரப் பேட்டையும், ராயபுரமும் சந்திக்கும் மிக முக்கியமான இடம் நடு மத்தியில் இந்துக்கள் வணங்கும் காமாட்சியம்மன் திருக்கோயில், வலதுபுறம் இஸ்லாமியர் வணங்கும் மசூதி, இடதுபுறம் கிறிஸ்துவர் வணங்கும் தேவாலயம், என மூன்று மதத்தினரும் அதிக அளவில் சந்திக்கும் முக்கியமான இடம் இப்படிப்பட்ட முக்கியமான இடத்தில் கண்காணிப்பு கேமரா மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல் தலைகுனிந்து இருப்பது பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பல மாதங்களாக இதை யாரும் கவனிக்கவில்லை என்பதால் இப்பகுதியில் எந்த அதிகாரிகளும் முறையாக வலம் வரவில்லை என்றுதான் அர்த்தம் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.