இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் பாணாவரம் கூட்டுரோடு பகுதியில் புதிய ஆட்டோ ஸ்டேண்ட் துவக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜு தலைமை தாங்கினார்.சப் – இன்ஸ்பெக்டர் மகாராஜன். வழக்கறிஞர்கள் உதயகுமார்.
சக்கரவர்த்தி, அருன் ஆதி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆட்டோ சங்க தலைவர் அக்பர் பாஷா வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் டி.எஸ்.பி. மனோகரன் கலந்து கொண்டு ஆட்டோ ஸ்டேண்ட் பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது ஆட்டோ ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும்.ஆட்டோக்களில் அதிகமான ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வாகனங்களை ஓட்டிச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்