144 தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து பொது இடத்தில் மக்கள் மத்தியில் வைத்து உதவி ஆணையர் தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை பிடித்த ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் தலைமையிலான போலீசார் அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கினார் ராயபுரம் எம்.எஸ். கோயில். கல்லறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களின் சுற்றித்திரிந்த அவர்களை பிடித்து கையில் டம்ளரில் தண்ணீரை ஊற்றி கீழே சிந்தாத வாறு அமர்ந்து எழுந்திருக்க வேண்டும் என நூதன தண்டனை வழங்கினார் நோய் தடுப்பதற்காக மக்கள் வெளியே வர கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ள நிலையில் இனி நாங்கள் வரமாட்டோம் என உறுதிமொழியை ஏற்று அவர்களை சுவாச கவசம் அணிந்து செல்லுங்கள் என எச்சரித்து அனுப்பினார்.

தேவையில்லாமல் சுற்றித்திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து நூதன தண்டனை வழங்கிய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.