சென்னை திருவொற்றியூரில் பத்மநாபா காலனி பகுதியில் இரண்டாவது தளத்தில் வசித்து வருபவர் தணிகாச்சலம் இவர் மனைவி மற்றும் மகளுடன் காலடிப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். திடீரென சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மேல்தளம் இடிந்து விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு தாயும் மகளும் இருந்தனர் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவல் தெரிந்த திருவொற்றியூர் காவலர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் சோதனையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.