உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுது வடசென்னையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது ஏற்கனவே தண்டையார்பேட்டை, ராயபுரம், எண்ணூர், உள்ளிட்ட பகுதிகளில் கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்
இந்நிலையில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பில் உள்ள அரசு கல்லூரியில் திடீரென்று கட்டில் பெட் போன்றவற்றை கொண்டுவந்து அறைகளை தயார் படுத்தி வருகின்றனர் மருத்துவ வசதிக்காக பணிகள் நடைபெற்று வருகிறது ஆனால் நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களை இங்கு தங்க வைப்பதற்காக பணிகள் நடைபெறுவதாக வதந்திகள் வேகமாக பரவியதை அடுத்து சுனாமி குடியிருப்பு மக்கள் சுனாமி போல திரண்டனர் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு சமூக இடைவெளி இல்லாமல் ஒன்று கூடி கல்லூரியின் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து 1 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனையடுத்து அங்கு வந்த வடசென்னை துணைஆணையர் அப்பகுதி மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்து அனுப்பி வைத்தார்