சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும், கிரஸ்ஹர் அமைப்பின் பணிபுரியும் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் 5800, ரூபாய் பணத்துடன் கூடிய மணிபர்ஸ், உடன் ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு, மற்றும் முக்கிய ஆவணங் களுடன் கீழே எடுக்கப்பட்டு. கிரஸ்ஹர் நிறுவனத்தின் மேனேஜர் ஹியாஸ், இடம் ஒப்படைத்தார். மேனேஜர் ஹியாஸ், அந்த மணி பர்ஸில் இருந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு உரிய நபரிடம் பணத்தை, ஒப்படைத்தார்.

அப்போது பணத்தை பெற்றுக் கொண்ட நபர் கண்ணீர் மல்க கூறியதாவது.

நான் போரூர் பகுதியில் பாய்ஸ் ஹாஸ்டலில் சமையல் மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு துணையாக எனது மனைவியும் பணிபுரிந்து வருகிறார். எனது மனைவிக்கு மார்பகத்தில் கட்டி ஒன்று ஏற்பட்டுள்ளது. கட்டி தொடர்பாக தனியார் மருத்துவமனையில் பரிசோதிக்க முயன்றபோது கையிலிருந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது. பணமில்லாத காரணத்தினால்,

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையை அணுகினேன். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும். இதற்கு மருத்துவ காப்பீடு திட்டம் வேண்டும். என்று கூறினார்.

மருத்துவ காப்பீடு திட்டத்தை பெற்றுக்கொள்ள என்னிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலவாகும் என்று மருத்துவர் கூறவே. தினமும் பணத்தை சேகரிக்க ஆரம்பித்து இன்று 5,800 ரூபாய் பணம் சேர்த்ததாகவும். இன்று அரசு மருத்துவமனைக்கு வரும் போது, அந்த பணத்தை தொலைத்து விட்டேன். அதை பெற்றுக் கொடுத்த கிரஸ்ஹர் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

வழியாக வந்த அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் நிலைய மருத்துவர் ரமேஷ், எதற்காக அழுகிறார்கள் என்று கேட்டபோது எனது மனைவிக்கு மருத்துவச் செலவிற்கு பணம் இல்லை என்று கூறவே மருத்துவ செலவுக்கு பணம் எல்லாம் வேண்டாம் மாற்று யோசனை செய்வோம் என்று உடனடியாக பரிந்துரை கடிதம் எழுதி வரும் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உங்களது மனைவியை அனுமதிக்க வேண்டும் பணம் இல்லாமல் ஆப்ரேஷன் செய்து தரப்படும் என்று நிலைய மருத்துவர் ரமேஷ் உறுதி கூறினார்.

சமையல் மாஸ்டர் தனது தொலைத்த பணத்தையும் பெற்றுக் கொண்டேன். எனது மனைவிக்கும் மருத்துவம் கிடைக்கப்போகிறது. என்று கண்ணீர் மல்க நன்றியை நிலைய மருத்துவர் ரமேஷுக்கு, தெரிவித்தார்.