பரிசோதனையை இருமடங்காக உயர்த்தியதன் காரணமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

எந்தவித தளர்வும் இல்லாமல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது

பாசிட்டிவ் ரேட் 9% இருந்து 8%மாக குறைந்து உள்ளது.

கடந்த 2 நாட்களில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை அளிக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இருந்த நிலையில், தற்போது அதி பாதியாக குறைந்து உள்ளது. தமிழகத்தில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், பாதித்தவர்கள் எண்ணிக்கை பொறுத்தவரை தெலுங்கானா நம்மை விட அதிகமாக உள்ளது.

இறப்பு என்ணிக்கையில் தமிழகம் குறைந்து தான் உள்ளது. சென்னையில் சற்று அதிகமாக இறப்பு என்ணிக்கை வருகிறது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி தடைப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தளர்வுகள்

பொது போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து முதலவர் ஆலோசனை கூட்டம் நடத்தி பின்னர் அறிவிப்பார்.

சித்தா மூலம் அளிக்கப்படும் சிகிச்சையை அதிகப்படுத்தி உள்ளோம். மேலும் அங்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது அதிகமாக மக்கள் வெளியில் இருந்து வர துவங்கி உள்ளனர். மேலும் தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத குறை தெரியாத அளவிற்கு அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. மாவட்ட செயலாளர் இப்பகுதிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளார். மேலும் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் எங்களுடன் இணைந்து பணியாற்றினால் அவரை வரவேற்க தயாராக உள்ளோம்.

அதிமுகவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஒவ்வொரு தொண்டர்கள் மத்தியிலும் நிறைந்து உள்ளனர். அவர்கள் இல்லாத குறையே தெரியாத அளவிற்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் நடவடிக்கைகள் உள்ளது. அதிமுக பொறுத்தவரை வெற்றிடம் இல்லை. இங்கு ஹவுஸ்புலாகவும், திமுகவில் ஹவுஸ் எம்டியாகவும் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி நாங்கள் தனியாக பிரச்சாரம் செய்ய வேண்டியது இல்லை. எங்கள் பணிகளை மக்கள் பார்த்து உள்ளனர்.

சபாநாயகர் தனது விசாரணையை துவங்கி உள்ளார். இதில் மறைக்க எதுவும் இல்லை. உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின் சபாநாயகர் இரு தரப்பு விளக்கங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்விவகாரத்தில் மறைக்க எதுவுமில்லை.