சென்னை காசிமேடு சிங்காரவேலன் பகுதியை சேர்ந்தவர் திவாகரன் வயது 28. இவர் இன்று மாலை காசிமேடு கடலுணவு வியாபாரிகள் நல சங்கம் எதிரே நின்றுகொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். பின்னர் திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திவாகரனை சரமாரியாக கழுத்து மற்றும் கால் பகுதியில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.பின்னர் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த திவாகரனை அருகில் இருந்த நபர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் திவாகரனை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே திவாகரன் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காசிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் திவாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள மூன்று நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஏற்கனவே திவாகர் மீது காசிமேடு காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக திவாகரனை கொலை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.