சென்னை திருவொற்றியூர் பூங்காவனம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்கணபதி. இவர் ஊர்காவல் படை வீரராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் திருவொற்றியூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரூபாவதி என்ற பெண்ணிற்கு பெற்றோர்களால் ஏற்பாடு செய்யபட்ட திருமணம் இன்று விமர்சையாக நடைபெற இருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் திருவொற்றியூரில் உள்ள ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது.

திருமணத்தில் மணமக்கள் சுவாச கவசம் அணிந்து தாலி கட்டினர். இதில் ஊர்காவல் படை மண்டல கமாண்டர் பரமசிவம், பிளாட்டூன் கமாண்டர்கள் ராமசுப்ரமணியன், அல்லா பிச்சை, ரத்னவேல் சுப்ரமணியன், உதவி பிளாட்டூன் கமாண்டர் உதயகுமார் ஆகியோர். அடங்கிய ஊர்காவல் படை அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்தினர்.