சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்து வந்த ராமதாஸ், என்பவர் வண்ணாரப்பேட்டை காவலர்களால் கைது செய்யப்பட்டது

வண்ணாரப்பேட்டை பகுதியில் கூலித் தொழிலாளர்கள் அதிகம் அவர்களுக்கு ஆசைகளும் அதிகம் ஒருநாள் இல்லாமல் மறுநாள் பணவரவு அதிகம் வராதா என்ற ஆசையில் அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி தினந்தோறும் வாங்குவது வழக்கம் ஆனால் மக்கள் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்துள்ளனர். இதனால் பல குடும்பப் பெண்மணிகள் கூலி தொழிலுக்கும் வீட்டு வேலைக்கும் சென்று வந்து தனது குடும்பத்தை மற்றும் பிள்ளைகளை பராமரித்து வருகின்றனர். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் லாட்டரி வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நரசியர் தெருவில் வசித்துவரும் ராமதாஸ் (60) என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர்.