சென்னை கொடுங்கையூர்  கிருஷ்ணமூர்த்தி நகரில் வசித்து வருபவர் மோகன்ராஜ் இவர் முன்னாள் ராணுவ  வீரராக பணியாற்றி வந்துள்ளார், இவரது மகள் பிரியதர்ஷினி(27) B.Tech,IT படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.மோகன்ராஜ் தனது மகள் திருமணத்திற்காக தமிழ் மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.

இதனைப் அந்த இணையதளத்தில் பார்த்த ஷாம்(எ)ராகேஷ் என்பவர் தான் ME/M.tech படித்து முடித்துவிட்டு சென்னை ஆவடியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிவதாக கூறியுள்ளார். மேலும் தான் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் சரியாக இருப்பதாகவும் தன் தந்தை சிங்கப்பூரில் வசித்து வருவதாகவும் அவர் சென்னைக்கு வந்தவுடன் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

இதனிடையில் ஷாம் பிரியதர்ஷினியிடம்  திருமண ஆசை வார்த்தைகள் கூறி 5 லட்சத்து 43 ஆயிரம் மற்றும் 20 சவரன் தங்க நகைகள் ஆன்லைன் மற்றும் நேரில் வந்து வாங்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தந்தை  மோகன்ராஜிக்கு  இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும் என்று கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஆபிரகாம்,
அந்த நபரை விசாரித்ததில் அவர் ஏற்கனவே திருமணமான நபர் என்பதும் அவர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது இதனையடுத்து இவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.