சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் சிலர் போதை பொருட்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்வதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆய்வாளர் தெய்வேந்திரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் நடத்திய தீவிர சோதனையில் சுனாமி குடியிருப்பு இ பிளாக் பகுதியை சேர்ந்த

மரியதாஸ்(34) என்பவர் வீட்டில் கேரட் பீர் தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 5 லிட்டர் கேரட் பீரை பறிமுதல் செய்தனர்.