சென்னை திருவொற்றியூரில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் வடமாநிலத்ததை சேர்ந்த நபர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறதா என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஊரடங்கு உத்தரவினால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது இதனையடுத்து கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது இதனால் வட மாநிலங்களுக்கு செல்லும் வடமாநிலத்தவர் ஏராளமானோர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கி இருந்தனர் இவர்களை சென்னை மாநகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபங்கள் சமூக நலக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட திருவெற்றியூர் சன்னதி தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு மாநாகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் தங்களிடம் நோய்த்தொற்று குறித்து பதிவேடுகளை முறையாக கேட்டு அறிந்தார்.

இதனையடுத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ்

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.

பல்வேறு நிலையில் உள்ள 16000 பேர் மாநகர அனைத்து வார்டுகளிலும் இந்த கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடுகள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் கண்காணிக்க 15000 பகுதிகளாக மாநகரம் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நபர் என்கிற அடிப்படையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை மாவட்டத்தில் உள்ள எல்லா வீடுகளிலும் தினமும் கண்காணிக்க உள்ளோம்

ஏதாவது அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

மாநகராட்சி அலுவலர்கள் தினமும் வீடுகளில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

18 லட்சம் குடும்பங்கள் சென்னை மாநகராட்சியில் உள்ளனர் அறிகுறிகளின் அடிப்படையில் கணக்கெடுப்பின் படி மருத்துவர் சிகிச்சை அளிப்பார்கள்.

ஏதவது ஒரு பகுதியில் கொரானா தொற்று உறுதி செய்யும் பட்சத்தில் பாதிகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும்.

சென்னையில் இதுவரை 40 இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று வரை 37 இடங்கள் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது இன்று 40 பகுதிகள் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள மக்கள் பாதுகாப்பு பகுதி எல்லை வரை மட்டுமே வரமுடியும்.

கடைகளை பொறுத்தவரை 74 மார்க்கெட் மாநகராட்சி பகுதிக்குள் உள்ளது இதில் 60 மார்க்கெட்கள் இடம் பெயர்ப்பட்டு ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இடைவெளியை பின்பற்றுவது மக்களின் கடமை.

அடிப்படை பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை.

தேவை இன்றி ஒரு இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

வியாபாரிகள் சங்கத்தோடு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 1000 நடமாடும் வண்டிகளுக்கு சிறப்பு அனுமதி இரண்டுமாத காலத்துக்கு அளித்துள்ளது.

மொத்த வியாபாரத்துக்கு எந்த தடையும் இல்லை.

சட்டத்தை காட்டி மிரட்ட வேண்டிய நோக்கம் அரசுக்கும் மாநகராட்சிக்கும் இல்லை. அவ்வாறு ஏற்படும் பட்சத்தில்

1913 இலவச அழைப்பு எண்களுக்கு தொடர்பு கொண்டால் நடவடிகை எடுப்போம்.

சென்னையில் 102 கொரானா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ராயபுரம் முதலிடத்தில் உள்ளது.

கோடம்பாக்கம் மருத்துவர் அருள்வேல் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகிறது.

இதே போல் தப்லீக் ஜமாத் மாநாடு சென்றவர்களுடைய தகவல்கள் தனித்தனியாக திரட்டப்பட்டு வருகிறது.

பீனிக்ஸ் மாஹால் பொறுத்தவரை மேற்படி அறிகுறிகள் யாரிடமும் இதுவரை கண்டறியப்படவில்லை.

1 லட்சம் பேர் கொரானா செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

10 லட்சம் பேர் எதிர்பார்த்தோம். எனவே அனைவரும் இந்த செயலியை பொதுமக்கள் பதிவிரக்கம் செய்ய வேண்டும்

24000 பேர் வீட்டு தனிமையில் உள்ளவர்களில் 13000 பேர் தனிமைப்படுத்திய காலம் நிறைவு பெற்றுள்ளது.

லயோலா கல்லூரி உதவியுடன் வெளிநாடு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்தபட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கபட்டு வருகிறது.

மண்டல வாரியாக தகவல்கள் அளித்து வருகிறோம்.

பாதுகாப்பு உக்திகாக தான் கொரானா உறுதி செய்யப்பட்ட பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளது மக்கள் பீதி அடைய தேவை இல்லை இது வழக்கமான மருத்துவ நடைமுறைதான்.

வெளிமாநில தொழிலாளர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு

92 இடங்களில் முகாம்கள் அமைக்கபட்டு 6000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு பெற்றுக்கொள்ளலாம்.

8000 பேருக்கு இதுவரை மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கட்டுமான தொழிலில் உள்ள 6000 நபர்களை அந்த நிறுவன முதலாளிகலே அவர்களின் அடிப்படை தேவைகளை பார்த்துக்கொள்கின்றனர்.

இதை முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.