தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் வயது (38) இவர் நேற்று இரவு ரவி என்பவருக்கு சொந்தமான லாரியை சுண்ணாம்பு கால்வாய் என்ற இடத்திலிருந்து ஓட்டி வந்துள்ளார் அப்போது ஓட்டுனர் சரவணன் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் சரக்கு லாரியை ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஆர்கே நகர் காவல் நிலையம் வாசல் அருகே உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் மோதி உள்ளார் இதில் காவல் நிலையத்தின் அருகில் உள்ள வழக்கறிஞரின் அலுவலகம் முற்றிலும் சேதமடைந்தது மற்றும் விபத்து நடந்த இடத்தின் அருகே இருந்த ஆட்டோ முன்பக்கம் கண்ணாடி சேதமடைந்தது. இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

இதில் சரவணன் ஓட்டிவந்த லாரியின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்து ஓட்டுநர் சரவணன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார் அவரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு துடித்த நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் ஒரு மணி நேரம் போராடி சரவணனை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது பின்னர் போலீசார் சேதமடைந்த லாரியை அப்புறப்படுத்தினர்

தண்டையார்பேட்டை போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்த விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.