144 தடை உத்தரவினால் பொதுமக்கள் அனைவரும் வீட்டினுள் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பல்வேறு இடங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை எர்ணாவூர் பஜனை கோவில் தெரு அம்மன் கோவில் பகுதிகளில் சுமார் 450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உணர்வதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி புரியும் வழக்கறிஞர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி காய்கறி உள்ளிட்டவைகளை வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன் வழங்கினர்.

எண்ணூர் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதனால் பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பதனால் தங்கள் தேவைகளை இதுபோன்று சமூக ஆர்வலர் மட்டுமே நிறைவேற்றி வருவதாக தெரிவித்தனர்.