ஆர்கே நகர் பகுதியில் வசித்துவரும் ஏழை எளிய மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்திய நாள் முதற்கொண்டு இன்று வரை தினந்தோறும் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது ஆட்டோ ஓட்டுனர்கள் முதல்கொண்டு திருநங்கைகள் வரை பயன் பெற்று வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக இன்று வண்ணாரப்பேட்டையில் வசித்துவரும் சலவைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கி உள்ளதை அறிந்த மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சுமார் 14 நபர்களுக்கு பித்தளை சலவைப் பெட்டி வழங்கினார் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் சுமார் 250 நபர்களுக்கு அரிசியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.