சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் சூர்யா, என்பவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிய மணி, என்ற பாட்டில் மணி, மீது போலீஸார் குண்டாஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடகிருஷ்ணன் தெருவில் கடந்த மாதம் 10 ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சூர்யா, என்ற இளைஞரை அதே பகுதியில் பூக்கடையில் வேலை செய்து வரும் மணிகண்டன், என்ற பாட்டில் மணி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார் இதில் நிலைகுலைந்த சூர்யாவை, கண்டு அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீஸார் ரத்தவெள்ளத்தில் கிடந்த சூர்யாவை, மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர் இதனையடுத்து தலைமறைவான எதிரிகளை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே பாட்டில் மணி, மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு கொலை முயற்சி வழக்கு என நிலுவையில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து தாக்குதல் நடத்தியதால்.
சிறையில் இருக்கும் பாட்டில் மணி, மீது சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.