சென்னை, திருவொற்றியூர், ராஜாகடை, ராமானுஜம் தெருவை சேர்ந்தவர் ரவி, இவரின் மகன்.
ஜெயராமன்(வயது.18), ஆவார் இவருக்கு ஊரடங்கிற்கு முன்பு, பெற்றோர் புது இருசக்கர வாகனம் ஒன்று வாங்கி கொடுத்தனர், கடந்த 25ம் தேதி அன்று, ஜெயராமன்  புது வாகனத்தை வெளியில் எடுத்துச்சென்றார், அப்போது, வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது, வாகனத்துக்கு கவர் போட்டு வருவதாக தெரிவித்தார், ஆனால், அன்று, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை இது தொடர்பாக, ரவி மற்றும் அவரது உறவினர்கள் , ஜெயராமனை தேடினர், ஆனால், அவர் கிடைக்கவில்லை, அவரின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது, திருவொற்றியூர் போலீசில், ஜெயராமன் காணாமல் போனதாக , ரவி புகார் கொடுத்தார். ஆய்வாளர் ஆரோக்கியராஜ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், போலீசார், ஜெயராமனை தீவிரமாக தேடி வந்தனர், அப்போது, ஜெயராமன் நண்பர் வெள்ளிவாயல் சாவடியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் செல்போனில், வந்த ஒரு அலறல் ஆடியோ ஒன்று , போலீசுக்கு கிடைத்தது, அந்த ஆடியோவில், ஜெயராமன் அலறல் சத்தமும், தன்னை அடித்து உதைக்கும் நபர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். தான் சாகும் தருவாயிலும் கூட, தன்னை தாக்கியவர்களை அவர் அடையாளம் காண்பித்தார், போலீசார், ஏதோ விபரீதம் நடந்ததை உணர்ந்து, ஜெயராமனை தேடுவதில் தீவிரம் காட்டினர்.இதையடுத்து, வடசென்னை துணை ஆணையர் சுப்புலட்சுமி. தலைமையில், உதவி ஆணையர் ஆனந்தகுமார். தலைமையில், ஆய்வாளர் ஆரோக்கியராஜ் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர். அந்த ஆடியோவில் பதிவான நபர்களை ஒரு மணி நேரத்தில் பிடித்தனர், விசாரணையில், அவர்கள், திருவொற்றியூர், பகுதியை சேர்ந்த கணேஷ்(வயது19), சூர்யா(வயது20), நாகராஜ்(வயது20) ஜோசப்(வயது21), அலிபாபா(வயது19),முகமது ஆசிப்(வயது18) ஆகியோர் என தெரியவந்தது,இதைத்தொடர்ந்து, போலீசில் பிடிப்பட்ட 6 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டன, அதில், ஜெயராமன், சம்பவத்தன்று, தன்னுடைய புது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, நல்ல தண்ணீர் ஓடை குப்பம் சென்றார்,  அங்கு, சூர்யா, கணேஷ், ஜோசப் நாகராஜ் உள்ளிட்ட 6 பேரை சந்திந்தார், அவர்கள், அங்கு கஞ்சா போதையில் இருந்தனர், அவர்களிடம், 600 ரூபாய் கொடுத்து, ஜெயராமான் கஞ்சா கேட்டார்,ஆனால், அவர்கள் பணம் வாங்கி, கஞ்சா தரவில்லை, இதனால், ஜெயராமனுக்கும், அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டன,ஜெயராமன் சண்டையிட்டது, கஞ்சா போதையில் இருந்த அவர்களுக்கு ஆத்திரமானது, மேலும், ஜெயராமனின் புது வாகனம் அவர்களின் கண்களை உறுத்தியது, வாக்குவாதம் முற்றியதில், அப்பகுதியில் இருந்த கல், மதுபாட்டில்களால் அடித்து, ஜெயராமனை கொடூரமாக கொன்றனர், இதற்கிடையில், ஜெயராமன், நண்பர் ஜெயராஜிடம் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். ஜெயராமன் அப்போது தான், தன்னை அடிக்கும் நபர்கள் குறித்து அலறியுள்ளார், அது, ஜெயராஜ் போனில் பதிவாக, இவர்கள் சிக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில், ஜெயராமனின் அலறல் சத்தம் நின்றது, சம்பவ இடத்திலேயே ஜெயராமன் உயிரிழந்தார், பின்னர், என்ன செய்வது என தெரியாமால், கடற்கரையில் குழித்தோண்டி, ஜெயராமனை புதைத்தனர். பின்பு காவலர்களிடம் பிடிப்பட்ட 5 பேரை கைது செய்து, சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர், அங்கு, உயர் காவல் அதிகாரிகள், வட்டார அலுவலர் சேஷாயி உள்ளிட்டோர் மத்தியில், ஜெயராமன் உடல் தோண்டி எடுக்கப்பட்டன, அங்கே அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தவற்கு, உடற்கூறு மருத்துவர் நிர்மலா இருந்தார். பின்னர், பரிசோதனை முடிந்த பிறகு, ஜெயராமன் உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, ஜெயராமன் இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன,

ஊரடங்கு உத்தரவில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, இதனால், போதைக்கு, இளைஞர்கள் பல வழியை தேட ஆரம்பித்து விட்டனர், திருவொற்றியூரில், வீட்டிலேயே ஒயின் தயாரித்த குமார், மேரி ஆகியோர் கைதாகினர், கஞ்சா வரும் இடமே , ஆந்திரா என சொல்லப்படுகிறது, ஆனால், எந்தவித போக்குவரத்து இல்லாமல், சென்னையில், கஞ்சா கிடைப்பது எப்படி என பொது மக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது, வீட்டில் இருந்து, சாலைக்கு  சென்றாலே, வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார், கஞ்சா வரும் பாதையை கண்டுபிடிக்காதது ஏன் என குற்றம் சாட்டப்படுகிறது, கஞ்சா தகராறில், வாலிபர் கொல்லப்பட்டு , புதைக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,