உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஓ.ஜி.கே.எஸ்.ஐ சார்பில் கராத்தே சாம்பியன் போட்டி பெரம்பூரில் உள்ள
தனியார் பள்ளியில் நடைபெற்றது

இந்தப் போட்டிகளை ஓ.ஜி.கே.எஸ்.ஐ ஆல் இந்தியா ஆர்.ஈஸ்வரன் இதற்கான ஏற்பாடுகளை செய்து துவக்கி வைத்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் உரையாற்றினார்

இதில் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த கராத்தே போட்டியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் வழிப்பறி திருடர்கள் இருந்து தன்னை எப்படி பாதுகாக்க வேண்டும் எனவும் இரவில் தனியாக நடந்து செல்லும்போது தன்னை ஒருவர் வழிமறித்தாலும் அவர்களிடமிருந்து எப்படி தன்னை பாதுகாத்துக் கொள்வது என விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை செயல் வடிவமாக காண்பித்து பார்வையாளர்களை அசத்தினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கராத்தே ஆர்.தியாகராஜன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களும் கேடயங்களும் நற்சான்றிதழ்களையும் வழங்கி அவர்களை கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வெளிநாடு சென்று கராத்தே போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கல பதக்கங்களை வென்று சாதனை பெற்ற மாணவிகளும் வந்திருந்தனர்.

இப்போட்டியை காண மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.