வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டி பகுதியில் இயங்கிவரும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்72.ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அவரின் திருவுருவம் படத்திற்கு மலர் தூவி இனிப்பு வழங்கி, சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் S.R.K. அப்பு, காட்பாடி ஒன்றிய செயலாளர் K.S. சுபாஷ், அண்ணா தொழிற்சங்க தலைவர் V.K. கேசவன், செயலாளர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…