சென்னை, சவுகார் பேட்டையில் பல இடங்களில், வெளி மாநில தொழிலாளர்களுக்கு, ஜெயின் சமூகம் தொடர்ந்து, 50 நாட்களாக உணவு வழங்கி வருகின்றனர்,

சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்த நிர்மல் மர்லேச்சா,அசோக் பிப்பாடா, ஆகியோர், கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர், மானவ் மித்ரா சேவா சமிதி சார்பில், கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல்,மாநகராட்சியால் தங்கவைக்கபபட்டுள்ள 950 வெளி மாநில நபர்களுக்கு,நேற்று 50வது நாளாக தொடர்ந்து, உணவு வழங்கி வருகின்றனர், நேற்று சவுகார்பேட்டையில், 500 பேருக்கு உணவளித்தனர், தங்களுக்கு உதவி செய்யும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்,