சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள ஆர்கே நகர் தொகுதி ராயபுரம் பாரிமுனை ஆகிய பகுதிகளில் முடக்கபட்ட பகுதிகளில் சென்னையில் கொரோனாவை தடுக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஏடிஜிபி மகேஷ்குமார், சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

உடன் கூடுதல் ஆணையாளர் தினகரன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கண்காணிப்பாளர் மல்லிகா, இணை ஆணையாளர் கபில் குமார் சரத்கர், துணை ஆணையாளர் சுப்புலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.