சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த
மணிகண்டன் (எ) பூச்சி மணிகண்டன் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் ரவி தலைமையில் உடனடியாக. தனிப்படை அமைத்து. தலைமை காவலர்கள். நாகேந்திரன். விஜயகுமார். வீரகுமார். ஆகியோர். பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையில் உள்ள குடியிருப்பில் பதுங்கியிருந்த. பூச்சி மணிகண்டன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பூச்சி மணிகண்டன் வீட்டில் அமர்ந்தபடி கஞ்சாவை சிறிய அளவில் பொட்டலங்களை தயார் செய்து கொண்டிருந்தான். மணிகண்டனை மடக்கிப் பிடித்த காவலர்கள். அவனிடமிருந்த. நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய கஞ்சா பொட்டலங்கள். மற்றும் போதை மாத்திரைகளை. பறிமுதல் செய்யப்பட்டடு. மணிகண்டனை கைது செய்து. காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை விசாரணையில் பூச்சி மணிகண்டன் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா வாங்கி வந்து தனது வீட்டில் சிறிய பொட்டலமாக செய்து சுற்றுவட்டார பகுதிகளில். விற்று வந்துள்ளான் என தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்கு போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.