வடசென்னை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் குளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் வாரிய அதிகாரிகளை உடன் அழைத்துச் சென்று.ஆர்.கே.நகர், தொகுதிக்கு உட்பட்ட நெடுஞ்செழியன் நகர், அன்னை சந்தியா காந்தி நகர், புதிய வினோபா நகர், படெல் நகர், சாஸ்திரி நகர், கருணாநிதி நகர், வினோபா நகர், என சுமார் 30க்கும் மேற்பட்ட மிகக் குறுகிய சந்துகளிலும் சாக்கடை நீரை பொருட்படுத்தாமல் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணம் பயன்படுத்தாமல் கழிவு நீரில் இறங்கி அனைத்து தெருக்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட செயலாளரிடம் வைத்தனர். அனைத்தையும் சரி செய்து தரப்படும் என அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு தெருவுக்கு ஒரு கட்சி நிர்வாகிகளை நியமித்து பொது மக்களின் பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், மழை காலத்தில் கழிவு நீர் சூழ்ந்தது இந்த ஆண்டுக்குள் முடிவு கட்ட வேண்டும். என்று அதிகாரிகளுக்கு, மாவட்ட செயலாளர் கூறினார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் சிலர் தங்களிடம் எங்களது குறைகளை கூற வேண்டும். உங்களை சந்திக்க வேண்டும். என்று கூறிய போது. எனது வீடு தூரத்தில் கிடையாது அருகில்தான் உள்ளது. தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் தான் உள்ளது எனது வீட்டிற்க்கு எந்த நேரம் வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம் என்று கூறி தனது கைபேசி எண்ணை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார். மிக மோசமான கழிவுநீர் களில். சாதாரணமாக வந்து மக்களின் பிரச்சனைகளை நேரில் வந்து ஆய்வு செய்த அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்களுக்கு அப்பகுதி பொது மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.