சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட கொளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோணா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சித்த மருத்துவ பெட்டகத்தை வழங்கினார். இதை தொடர்ந்து மருத்துவர்களுக்கு பொன்னாடை பேர்த்தியும், பூக்கள் மற்றும் புத்தகம் அளித்தும் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கெளரவப்படுத்தினார்.

தீர்மானம் நிறைவேற்றும் திமுக உள்ளிட்ட சில கட்சிகள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். திமுக ஆட்சி காலத்தில் பேரிடர் காலத்தில் எந்த உதவியையும் மக்களுக்கு செய்தது கிடையாது. தீர்மானம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையை தான் திமுக உள்ளிட்ட சில கட்சிகள் செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது தமிழகத்தில் 63,750 மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதில் 6993 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் 10 சதவீதம் அளவில் நோய் தொற்று இருந்தாலும் நேற்று ஒரே நாளில் 5723 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,62,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 52,000 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருவதால், பாதிக்கபடுவோர்களை விட குணமடைவோர் அதிகமாக உள்ளனர். என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தெரிவித்தார்.