சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி சென்னை முழுவதும் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர் இன்னிலையில்
வண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக நுண்ணறிவு பிரிவு காவல் துறையின் மூலமாக தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை காவல் நிலைய தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் ஒரு வீட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதை தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் பதுக்கி வைத்து கணவன்-மனைவி இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையைச் சேர்ந்த 1″கர்ணன்(வயது45), அதே பகுதியை சேர்ந்த 2″குமுதவல்லி(வயது30), 3″ஆகாஷ் (வயது19), 4″சங்கர்(வயது30), போஜராஜன் நகரை சேர்ந்த 5″ராஜேஷ்(வயது21) உள்ளிட்ட 5 நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.