சென்னை: காசிமேடு, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ஆர்கேநகர், என நான்கு இடத்தில் திருடிய மூன்று திருடர்கள் கைதுசெய்யப்பட்டு. அவர்களிடமிருந்து, இரண்டு இருசக்கர வாகனம். 8 செல்போன். ஆர்கே நகர் குற்ற பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த மாதம் ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வினோபா நகர் மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை ஒன்றில் பூட்டை உடைத்து செல்போன்களை, திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆர்கே நகர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் கொடிராஜன். வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின். காட்சிகளை வைத்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இன்று காலை ஐஓசி பஸ் நிறுத்தம் அருகே ஆர்கேநகர் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் அமர்ந்து அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனத்தை மறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முன்னுக்குப் பின்னே பதில் கூறவும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில். எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சரத் என்கின்ற பூச்சி சரத் (வயது21) அதே குடியிருப்பை சேர்ந்த கௌரி சங்கர் (வயது24) கொருக்குப்பேட்டை மேயர் பாசு தெருவை சேர்ந்த பாஸ்கர் என்கின்ற பல்லு பாஸ்கர். (வயது22) என்பதும் இவர்கள் 3 நபர்களும் ஒன்றிணைந்து.

வினோபா நகர் மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை பூட்டை உடைத்து செல்போன் திருடியதும், காசிமேடு பகுதியில் இரு சக்கர வாகனம் ஒன்றை திருடியதும், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில். இருசக்கர வாகனம் ஒன்றை திருடி, அதே பகுதியில் அரசு மதுபான கடை ஒன்றை உடைத்து. மதுபானங்களை திருடியதும், திருவொற்றியூர் நாய் கோட்ரஸ் பகுதியில் டீக்கடை ஒன்றை உடைத்து. பீடி, சிகரெட், திருடியதும் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனம் 2. மற்றும் செல்போன்கள் 8 ஆர்கே நகர் குற்ற பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மீது கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைத்து திருட்டு வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இவர்கள் மீது ஆர்.கே. நகர், பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.