கடல், கடலார்க்கே என்று முழக்கமிட்ட மறைந்த ஜீவரத்தினத்தின், 110 வது பிறந்த நாளையொட்டி, ராயபுரத்தில் உள்ள மணி மண்டபத்தில், பாரத மக்கள் கழக தலைவர் டாக்டர் பிரபாகரன் தலைமையில், ஏராளமான நிர்வாகிகள் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர், பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன், மீனவர் சமுதாயத்திற்கு போராடிய ஜீவரத்தினத்தின் பிறந்த நாளையொட்டி, அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம், எந்த கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், மீனவர்களின் பிரச்சினை தீரவில்லை, இலங்கையில், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து, அந்நாட்டின் அமைச்சர் மகிச்சி தெரிவித்தது, கண்டத்திற்குரியது, இது தொடர்பாக , பிரதமர் மோடி வாய் திறக்காதது, வருத்தம் அளிக்கிறது, எனவே, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால், மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.