சென்னை ஆர்.கே.நகர் நாவலர் குடியிருப்பு குடிசை மாற்று வாரிய வளாகத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக, இரவு ரோந்து பணியில் இருந்த கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் கவிதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் அப்பகுதியில் சோதனை நடத்தினர் அப்போது, 3,000 கிலோ மதிப்பு கொண்ட அரசு ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது, அதை பறிமுதல் செய்தனர் அதை தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேஸ்வரி என்பவரை கைது செய்தனர், பின்னர், இந்த வழக்கு, சிவிள் சப்ளை சிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன, இரவு ரோந்து பணியில் மிகத் துரிதமாக பணியாற்றிய கொருக்குப்பேட்டை ஆய்வாளர் கவிதாவின் செயலுக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.