ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளா் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ்.கே.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோட்டச் செயலாளா் டி.வி.ராஜேஷ், கோட்டத் தலைவா் மகேஷ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தியாளர் சுரேஷ்குமார்