இந்திய அஞ்சல் துறையினரால் சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு சிறப்பு முத்திரை வெளியிடுவதன் மூலம் முக்கிய நிகழ்வுகள் நினைவுகூறப்படும் அளவுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஒரு நிகழ்வு அல்லது வருடாந்திர வெளியீட்டு திட்டத்தில் ஒரு நிகழ்வாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிடுவதன் மூலம் அந்நிகழ்வு நினைவு கூறப்படலாம், இது ஒரு சிறப்பு முத்திரையுடன் ரத்து செய்யப்படலாம் இந்த நோக்கத்திற்காக தபால் நிலையத்தில் சிறப்பு அஞ்சல் உறைக்கான கட்டணங்களை செலுத்துவதன் மூலம் இச்சேவையை பெறலாம். உள்நாட்டு கடித அஞ்சல் விகிதத்திற்கு சமமான எந்தவொரு குறைந்தபட்ச அஞ்சல் முத்திரைகளையும் தபால்துறை வட்டங்களின் முதன்மை அஞ்சல் துறை அதிகாரிகள் அதிகாரத்தின் கீழ் எந்தவொரு நிகழ்வு / நிறுவனம் / தொடக்க நிகழ்வினை நினைவுகூறும் சிறப்பு அஞ்சல் உறைகளை அனுமதிக்கும் தகுதியான அதிகாரம் உடையது ஆகும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் சிறப்பு அஞ்சல் உறைக்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். அவர்கள் பரிசீலனை செய்து முதன்மை அஞ்சல் துறை அதிகாரிக்கு பரிந்துரைப்பார்கள். அதன்படி சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படும். அஞ்சல் உறை வெளியீட்டை சம்பந்தப்பட்ட அஞ்சல் துறை அலுவலகத்தினர் ஒருங்கிணைப்பார்கள்.
அவ்வாறு வெளியிடப்படும் சிறப்பு அஞ்சல் உறை முன்பக்கம் இடதுபுறம் சிறப்பு நிகழ்வுகளை விளக்கும் படம் இடம்பெற்றிருக்கும் வலதுபுறம் அஞ்சல்தலை ஒட்டுவதற்கான இடமும் நிகழ்வுக்கான சிறப்பு முத்திரையும் அச்சிடப்படும். அஞ்சல் உறையின் பின்பக்கம் சிறப்பு அஞ்சல் உறை நோக்கம் குறித்த கருப்பொருட்கள் இடம்பெறும். அஞ்சல் உறை நோக்கம் கொண்ட கருப்பொருட்கள் விளக்கம் ஆங்கிலத்தில் அச்சிட கூடியது நடைமுறையில் இருந்தது.
தற்போது ஹிந்தி மொழியில் முதலில் அச்சிட்டு பின்பு ஆங்கில முறையில் அச்சிட கூடிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது வெளிவரக்கூடிய சிறப்பு அஞ்சல் உறை ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி விளக்கத்துடனே வெளிவருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநில மொழியில் உள்ளவர்கள் விளங்கிக்கொள்ள இயலவில்லை.
அந்தந்த மாநில மொழியும் சிறப்பு அஞ்சல் உறை நோக்க கருத்துரையில் இடம்பெற வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் வேண்டுகோளாக உள்ளது.