சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை சரக துணை ஆணையர் சுப்புலட்சுமி, கலந்து கொண்டார் பிறகு அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மொபைல் போன் வாங்குவதற்கு வசதியில்லாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்துவதாகவும்.மேலும் கொரோனாவால் தன்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களுக்கு தையல் தொழில் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அப்பகுதிகளில் நடக்கும் குற்றங்கள் மற்றும் தங்களது குறைகளை தயக்கமின்றி தெரிவிப்பதற்கு தன்னுடைய தொலைபேசி எண்ணையும் அறிவித்தார். இதன் மூலமாக மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என துணை ஆணையர் சுப்புலட்சுமி, கூறினார்.