சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் முன்வந்து கப சுர கசாயத்தை வழங்கினார்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கபடுத்தும் என சித்த மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட கப சுர குடிநீரை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கினார்
இந்நிலையில் கொரோனா வைரஸ் பொதுமக்களுக்கு பரவாமல் இருக்க பிரதமர் மோடி ஆயுர்வேத மருத்துவர்களை ஆலோசனை செய்தனர் இந்த ஆலோசனையில் கபசுர குடி நீரை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து திருவெற்றியூர் காலடிப்பேட்டை சேர்ந்த இளைஞர்கள் நாட்டு மருந்து கடையில் கப சுர மூலிகை பொடியை வாங்கி அதை கசாயமாக செய்து காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதிக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.