ஆல்கஹால் கலந்த கைசுத்தீகரிப்பான்கள் (SANITIZERS) பயன்படுத்திய உடன் பட்டாசுகளை வெடிக்காதீர்

 

விழிப்புணர்வு நிகழ்வில் அறிவுறுத்தல்

 

ஆல்கஹால் கலந்த கைசுத்தீகரிப்பான்கள் (SANITIZERS) பயன்படுத்திய உடன் பட்டாசுகளை வெடிக்காதீர் என பட்டாசுகளை பாதுகாப்பாக படிப்பதற்கு திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் விஜயகுமார் விழிப்புணர்வு நிகழ்வில் கூறினார் விழிப்புணர்வு நிகழ்வில் விஜயகுமார் பேசுகையில்,

தீபாவளித் திருநாளில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடிகளை வெடிப்பது தொன்றுதொட்ட பழக்கமாக உள்ளது.

கொரொனா தீநுண்மி கொடுந்தொற்று காரணமாக

கடந்த பத்து மாதங்களாக அனைவரும் ஆல்கஹால் கலந்த கைசுத்தீகரிப்பான்கள் (SANITIZERS) கொண்டு கைகளை கழுவி வருகின்றோம்.

ஆல்கஹால் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம்

 

ஆகவே கைகளில் சேனிடைசர்களை உபயோகித்து விட்டு

மத்தாப்புகள், வெடிகள் போன்றவற்றைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

 

மீறித்தொட்டால் கைகளில் தீக்காயம் உண்டாகும் நிலை வரும்.

சில இடங்களில் தீ விபத்துகள் நேரும் அபாயமும் இருக்கின்றது.

 

மேலும், வீட்டிலும் சேனிடைசரையும் வெடி மத்தாப்புகளையும் ஒன்றாக வைக்கக்கூடாது.

 

எனவே, கட்டாயம் அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருக்கும் ஆல்கஹால் கலந்த சேனிடைசர் திரவங்களை குழந்தைகள், பிள்ளைகள் கைக்கு எட்டாத தூரத்தில் வைத்து விடுங்கள்.

 

கை கழுவ சோப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது

வெடிகள் வெடிக்கும் முன்பு கைகளை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டால் சருமத்தின் மேற்புறத்தில் இருக்கும் கண்ணுக்குப்புலப்படாத ஆல்கஹால் படிமம் நீக்கப்பட்டு விடும் என விழிப்புணர்வு நகரில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.