சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் வேல்முருகன் நேற்று இரவு வியாபாரம் முடிந்து கணக்கு வழக்குகளை சரி பார்த்து வீடு திரும்பினார் அதிகாலை தனது கடை உடைந்திருப்பதாக பொதுமக்களின் உதவியால் தெரிந்துகொண்டார் விரைந்து சென்று பார்த்த போது கடையின் கதவை திறந்த நிலையில் இந்தது உள்ளே சென்று பார்த்ததும் இரவு சரிபார்த்து வைத்த 25 ஆயிரம் பணம் மாயமானது தெரியவந்தது மற்றும் கடையில் இருந்த முக்கியமான மளிகைப் பொருட்களும் மாயமாகி உள்ளது அதன் மதிப்பை உரிமையாளர் வேல்முருகன் நாள் கணிக்க முடியவில்லை இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்துள்ளார் இதைத்தொடர்ந்து அப்பகுதி வியாபாரி சங்கத்தின் தலைவர் ராஜேஷ் கூறுகையில் வெளி ஆட்களின் நடமாட்டம் எங்கள் பகுதியில் அதிகமாக உள்ளதாகவும் இரவு நேரத்தில் காவலர்கள் ரோந்து பணியில் வருகின்றனர் சற்று விழிப்புணர்வோடு சிறிய சந்துகளிலும் வரவேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் இரு சக்கர வாகனம் திருடு போனது குறிப்பிடத்தக்கது.