சென்னை திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பிரபல பெண் திருடர்களை கைது செய்துள்ளனர்.

வட சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மூதாட்டிகளை குறிவைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடும் கும்பலை பிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுபடி வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தகுமார் மற்றும் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் இந்த கும்பல் ஷேர் ஆட்டோக்களில் செல்லும் வயதான மூதாட்டி களிடம் செயின் அறுந்து விட்டதாக கூறி பையில் வைக்குமாறு அவர்களிடம் நூதன முறையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆர்கே நகர், வில்லிவாக்கம், எக்ஸ்பிளைநெட், பூக்கடை , பேசின்பிரிட்ஜ், எழும்பூர் போன்ற காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனை அடுத்து தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு 7 பெண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். புது வண்ணாரப்பேட்டை பகுதியில் ராணி என்பவர் தலைமையில் ராஜாமணி, திலகா, மரியா ஆகிய நான்கு பேர் ஒரு பிரிவாக செயல்பட்டு கொள்ளையடித்து வந்ததும் கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ அருகே இசக்கி அம்மாள் என்பவர் தலைமையில் உஷா, லஷ்மி என்று மற்றொரு குழுவாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பெண் குழுக்களாக வயதானவர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் பேச்சுக் கொடுத்து ஒரே இடத்திற்கு செல்வதாக கூறி ஆட்டோவில் ஏறுவதும், ஆட்டோவில் ஏறியவுடன் வயதானவர்களின் செயினை கட் பண்ணி திருடுவது மற்றும் பெண்கள் வைத்திருக்கும் பையில் நகைகளைத் திருடுவது போன்றவற்றை தொழிலாக கொண்டு உள்ளனர். பல மூதாட்டியிடம் நகை திருடி உள்ளனர். இவர்கள் மேலும் தீபாவளி பண்டிகை காலங்களில் இதுபோன்ற மூதாட்டிகளிடம் நகைகளை திருட சென்னையில் தங்கி இருப்பதாக தெரியவந்தது தனிப்படை போலீசாரின் தீவிர முயற்சியால் சென்னை நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 பெண்களிடம் இருந்து சுமார் 200 கிராம் (25 சவரன்) தங்க நகைகளை பறிமுதல் செய்து திருட்டில் ஈடுபட்ட பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

சென்னை நகரின் வயதானவர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்த பெண்களை கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை ஆய்வாளர் புவனேஸ்வரி, உதவி ஆய்வாளர் மணிமாறன், காவலர்கள் மணுவேல், அசோக், சரவணன், பாலமுரளி, தீபன், ஜீவா, நாகேந்திரன், பெண் காவலர் சத்தியா, தன் ஆர்வலர் சிம்பு ஆகிய காவலர்களை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டுகளை தெரிவித்தார்.