சென்னை ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்‌.எம். மகப்பேறு. மருத்துவமனையின் சுற்றுவட்டார பகுதியில் கழிவு நீர் தொட்டிகள் திறந்த நிலையில் உள்ளது.

ஆர்.எஸ்‌.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை முழுவதும் உள்ள கழிவு நீர் தொட்டிகள் திறந்த நிலையில் காணப்படுகிறது மற்றும் குப்பைத்தொட்டிகள் தகுந்த இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ளது.பிரசவ வார்டுக்கு பின்புறம் கர்ப்பிணி பெண்களை பார்க்க மக்கள் குவிந்த நிலையில் உள்ளன அப்பகுதியில் மிக அருகிலேயே உயர் மின்னழுத்த ஒயர் மிக ஆபத்தான நிலையில் உள்ளது இதனால் உயிர்சேதம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் கூறப்படுகிறார்கள் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் மக்களின் கோரிக்கையாக உள்ளது நேற்றைய தினத்தில் மருத்துவமனையின் பின்புறம் உள்ள கால்வாயில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக ராயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிந்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் பிணத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தானாக விழுந்தாரா அல்லது ஏதேனும் மர்மம் உள்ளதா என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் தான் கொசு உற்பத்தி மிக அதிகமாக உருவாக்கி வருகிறது என மக்கள் கூறுகின்றனர்.கொரானா போன்ற கொடிய கிருமிகள் பரவி வரும் இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் நடக்கும் இந்த அலட்சியப்போக்கு மக்களிடையே பேரும் அதிர்ச்சியை உருவாக்கி வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா அல்லது கண்டும் காணாமல் இருப்பார்களா என்பது அப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.