இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் புலிவளம் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ஏவிடி நகர் பகுதியில் சுமார் 70 சென்ட் அரசாங்க புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிக்கு அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டனர். இருப்பினும் அந்த அதிகாரி கண்டுகொள்ளாமல் இருக்கிறார். தற்போது அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர் பென்சிங் அமைப்பதற்காக கம்பங்கள் நட்டு வைத்துள்ளார்.
ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மாவட்ட வருவாய்த் துறையினர் மீட்க வேண்டும் என்று அப்பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அப்பகுதியிலேயே வீட்டுமனை விற்பனை செய்வதற்கான பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.