சென்னை எண்ணூர் விரைவு சாலையில் நேற்று இரவு வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்தனர் இதைப் பார்த்த கடலோரம் வசிக்கும் பொது மக்கள் விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி மீது கல்வீச்சு நடத்தினர் இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களை சமரசப் பேச்சு நடத்தினர் ஆனால் பொதுமக்கள் சமரசம் ஆகாமல் இப்பகுதியில் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும் இதற்கு முழு காரணம் போக்குவரத்து காவல்துறையினர் தான் என்றும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.